மோட்டார்சைக்கிள்கள் மோதலில் கட்டிட தொழிலாளி பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் கட்டிட தொழிலாளி பலியானார்.;
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த அமுடூர் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் சதாசிவம் (வயது 30), கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். நேற்று மோட்டார்சைக்கிளில் அமுடூர் கிராமத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்று ெகாண்டிருந்தார்.
பூதேரி கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு ேமாட்டார்சைக்கிளில் வந்த கோவிந்தராஜ், சிவக்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.