மின்சாரம் தாக்கி கட்டிட ெதாழிலாளி பலி

பரப்பாடியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.;

Update: 2023-05-03 19:14 GMT

இட்டமொழி:

பரப்பாடியில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.

கட்டிட தொழிலாளி

நெல்லை மாவட்டம் பரப்பாடி ஆர்.சி. இலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாண்டிதேவர் மகன் இசக்கிமுத்து (வயது 40). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பரப்பாடி விநாயகர்புரம் காலனியில் புதிய வீடு கட்டும் பணியில் காங்கிரீட் போடுவதற்காக பலகைகளை அறுப்பு எந்திரம் கொண்டு அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டு இசக்கிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரம் தாக்கி பலி

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு பரப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இசக்கிமுத்துவுக்கு ஆரோக்கிய செபஸ்தியாள் (38) என்ற மனைவியும், மலையரசன் (18), பிரியா (15), பில்லர் (18) ஆகிய பிள்ளைகள் உள்ளனர். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி இறந்த சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்