வாருகால் அமைக்கும் பணி
வாருகால் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.;
சிவகாசி,
சிவகாசி யூனியன் அனுப்பன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7-வது வார்டு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய சாலை மற்றும் வாருகால் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த பகுதியை ஆய்வு செய்த பஞ்சாயத்து தலைவர் கவிதா பாண்டியராஜன், விரைவில் அந்த பகுதியில் சிமெண்டு சாலை மற்றும் வாருகால் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்படி தற்போது 7-வது வார்டுக்கு உட்பட்ட 4 ரோடுகளிலும், வாருகால் அமைத்து, பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அப்பகுதிக்கு வந்த பஞ்சாயத்து தலைவர் கவிதாபாண்டியராஜன் பணிகளை ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட சாலை சேதம் அடைந்து கிடந்த நிலையில் தற்போது புதிய சாலை அமைக்கும் பணியினை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.