பைனான்சியர் மிரட்டியதால் கட்டுமான கடை உரிமையாளர் தற்கொலை

கொளத்தூர் அருகே பைனான்சியர் மிரட்டியதால் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

Update: 2022-05-24 14:29 GMT

சென்னை, கொளத்தூர் தோட்டம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் என்கின்ற மாரி (வயது 28). இவர் கொளத்தூர் அடுத்த தாதா குப்பம் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் நடத்திவரும் பைனான்ஸில் கடன் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் நேற்று பைனான்சியர் மாரியின் கடைக்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி அவரை மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த மாரி இன்று வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னால் செல்போனில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தன்னுடைய தற்கொலைக்கு பைனான்சியர் வடிவேலு தான் காரணம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த நிலையில் பைனான்சியர் வடிவேலு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாரியின் உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ராஜமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்