நத்தம், லக்கிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி

நத்தம், லக்கிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜையை நல்லதம்பி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.;

Update: 2023-01-20 17:39 GMT

திருப்பத்தூர்

நத்தம், லக்கிநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிக்கு பூமி பூஜையை நல்லதம்பி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சி மற்றும் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நத்தம், ஏலவம்பட்டி கிராமங்களில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார், லட்சுமி முனுசாமி தலைமை வகித்தனர் அனைவரையும் ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் வரவேற்றார் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்டு பணிகளை திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே. முருகேசன் கே. ஏ. மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் துணைத் தலைவர் ஜி.மோகன்குமார், உட்பட ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்