புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கோவில்பட்டியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி- கடலையூர் ரோடு அம்பேத்கர் சிலை சந்திப்பில் இருந்து பழைய அரசு மாணவர் விடுதி வரை 7 மீட்டர் அகலத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.38 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதியில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், உதவி பொறியாளர் விக்னேஷ் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலையின் இருபுறமும் உள்ள மணல்மேடு ஆக்கிரமிப்புகளை 7 நாட்களுக்குள் அவர்களாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர் ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.