ரூ.30 லட்சத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி
ஜமுனாமரத்தூரில் ரூ.30 லட்சத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்;
கலசபாக்கம்
ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சமும், கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணிகளை பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் உடன் இருந்தனர்.