தூத்துக்குடி 3-வதுரெயில்வே கேட்மேம்பாலத்தில்இணைப்புச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தூத்துக்குடி 3-வதுரெயில்வே கேட்மேம்பாலத்தில்இணைப்புச்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2023-10-19 18:45 GMT

தூத்துக்குடி 3-ம் கேட் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இணைப்பு சாலை

தூத்துக்குடியில் உள்ள 3-வது ரெயில்வே கேட் மேம்பாலம் கடந்த 2010-ம் ஆண்டு, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்பிறகு மேம்பாலத்தின் தென்பகுதியில் இணைப்புசாலை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் இருந்து வந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்ற உடன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இணைப்பு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தொடக்கம்

இதனால் தற்போது மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேம்பாலத்தின் தென்பகுதியில் சாலை அமைக்க இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை பொதுமக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்