ரூ.34 கோடியில் மேம்பாலம், சாலை அமைக்கும் பணி

ஈரோடு கிழக்குதொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக அர்ஜுன்சம்பத் கூறினார்.

Update: 2023-02-12 17:13 GMT

கோரிக்கை மனு

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் ஜெயக்குமாரிடம் மனு அளித்தார். அதில் வாணியம்பாடி இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலை சரியாக அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு சார்பில் இம்மாவட்டத்தில் இலவச வேட்டி சேலை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தவரை 40 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகளும், ஆயிரம் கிறிஸ்தவர்கள் ஓட்டும் உள்ளது. அமைச்சர்கள் நேரடியாக சென்று அரசு எந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி ஓட்டு சேகரித்து வருகிறார்கள். ஆகையால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

ராணிப்பேட்டை பகுதியில் வாடகைக்கு கடை வைத்திருப்பவர்களை வக்பு வாரியம் கட்டாயப்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டிடம் கட்ட இதுவரை தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி தரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அமைப்பாளர் வி.கே.செல்வம், மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் சசிகுமார், மாநில செயலாளர்கள் எம்.கே.ரமேஷ், கமலக்கண்ணன் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்