ரூ.21 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி

திருமருகல் ஒன்றிய அரசு பள்ளியில் ரூ.21 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி;

Update: 2023-10-24 18:45 GMT

திட்டச்சேரி;

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி அரசு பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்பயத்தங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில், அதற்கான இடத்தையும் மற்றும் வடகரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினிதேவி பாலதண்டாயுதம், பாண்டியன், மோகன், ஊராட்சி செயலர் பிரகாஷ் குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்