ரூ.4.41 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது

திப்பணம்பட்டி- அரியப்பபுரம் இடையே ரூ.4.41 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது.;

Update: 2023-04-26 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் வரையிலான சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.4.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. யூனியன் தலைவர் சீ.காவேரி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, பஞ்சாயத்து தலைவர் தினேஷ்குமார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், மன்ற ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, யூனியன் துணை தலைவர் முத்துக்குமார், தி.மு.க. நிர்வாகி தளபதி விஜயன், வட்டார தலைவர் குமார் பாண்டியன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்