ரூ.2 கோடியில் பாலம் அமைக்கும் பணி

ரூ.2 கோடியில் பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-10 20:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே செஞ்சேரிபுதூர்-பச்சா கவுண்டன்பாளையம் சாலையில் ரூ.2.15 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில் கோட்ட பொறியாளர் நபிசாபிவி, உதவி கோட்ட பொறியாளர் மல்லிகா மற்றும் உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், கண்ணன் ஆகியார் கொண்ட குழு ஆய்வு செய்தது. பாலத்தின் தரம், உறுதித்தன்மை மற்றும் அளவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், கிணத்துக்கடவு உதவி கோட்ட பொறியாளர் அருணகிரி, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் தங்க அழகர் ராஜன், உதவி பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்