ரூ.2 கோடியில் பாலம் அமைக்கும் பணி
ரூ.2 கோடியில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.
பனவடலிசத்திரம்:
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பனவடலிசத்திரம் அருகே உள்ள கீழநீலிதநல்லூர் முதல் மருதன்கிணறு வரை செல்லும் சாலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், முத்தரசு, மாரியப்பன், சுவாமிதாஸ், பாபு, பொறியாளர் அணி மாதவன், இளைஞர் அணி ரமேஷ், ஒப்பந்தக்காரர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.