திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... கவர்னர் ஆர்.என்.ரவி

சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Update: 2024-11-07 08:51 GMT

சென்னை,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். கடற்கரையில் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "சூரசம்ஹார வைபவத்தில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் முருகப்பெருமான் நம் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியைப் பெருக்கி, அறியாமையின் நிழலில் இருந்து வெளிவரும் துணிச்சல், வலிமை, ஞானம் ஆகியவற்றை வழங்கி, நமக்குள்ளும் நம்மை சுற்றியும் பீடித்துள்ள தீய சக்திகளை வீழ்த்தி, தர்மத்தையும் நியாயத்தையும் உறுதிப்படுத்த அருள்புரிவராக. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்