கட்டிட ஒப்பந்ததாரர் கார் மோதி பலி

கீரனூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் கார் மோதி பலியானார்.;

Update: 2023-01-07 19:08 GMT

கட்டிட ஒப்பந்ததாரர்

கீரனூர் அருகே உள்ள அய்யாப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 63), கட்டிட ஒப்பந்ததாரர். இவர் கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு தனது மகன் இளையராஜாவுடன் (38) புதுக்கோட்டை புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒடுக்கூர் பிரிவு சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கமுதியை அடுத்துள்ள மரக்குளத்தை சேர்ந்த கார் டிரைவர் காளிதாஸ் (35) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்