கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை

சிங்காநல்லூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-10-08 20:45 GMT

சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரம் என்.ஜி.ஆர். லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 54). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு சமீபத்தில் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று அவரது மனைவி மற்றும் மகள், மகன் ஆகியோர் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு சென்றனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த ராஜன், வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்