500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

நீலகிரி மாவட்டம் முழுவதும் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.;

Update:2023-09-19 04:15 IST

ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் 10 அடி உயர விநாயகர் சிலையும், அனுமன் சேனா சார்பில் காந்தல் பகுதியில் 10 அடி உயர விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் வழிபட்டனர். மேலும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத் உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் 500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய சிலைகளை வைத்து வழிபட்டனர். பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஊட்டியில் நாளை (புதன்கிழமை) விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்