496 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் 496 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் 496 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
10 அடி வரை...
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அதில் 3 அடி முதல் 10 அடி வரை உயரம் கொண்ட சிலைகளை பிரதிஷ்டை செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பொள்ளாச்சி பி.கே.எஸ். காலனியில் 13 அடி உயர சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இதை அறிந்த நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து, அந்த சிலையை வைக்க அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிப்பட்ட பிறகு போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் சிலையை கொண்டு சென்று ஆற்றில் கரைத்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு, தாலுகா, வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம் ஆகிய பகுதிகளில் 231 சிலைகளும், சுல்தான்பேட்டையில் 42 சிலைகளும், வால்பாறையில் 80 சிலைகளும், கிணத்துக்கடவில் 43 சிலைகளும், ஆனைமலையில் 100 சிலைகளும் என மொத்தம் 496 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சிலை வைத்திருப்பவர்கள் 5 பேர், 3 சிலைக்கு ஒரு போலீஸ், 10 சிலைக்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.