முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-06-01 18:45 GMT

சாயல்குடி, 

கடலாடி இந்திரா நகரில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் விநாயகர், முருகன், சோனை கருப்பணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்து அருந்ததியர் உறவின்முறை நிர்வாகிகள் தலைமை வகித்தனர். கடந்த 11-ந் தேதி கடலில் புனித நீராடி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பல்வேறு யாகசாலை பூஜைகளும் நடந்தது. கடலாடி வடக்கு ஊருணி கரை விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், பூத்தட்டு எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று கடம் புறப்பாடு மேற்கொள்ளப்பட்டு விமான கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பெண்கள் 108 பால்குடமும், பூத்தட்டு ஏந்தியும் ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் இந்து அருந்ததியர் உறவின்முறை, அருந்ததியர் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்