விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-05-06 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி நந்தவனத்தில் உள்ள கற்பக விநாயகர், முருகர் மூஷிக வாகனம், நந்தீஸ்வரர், நாகராஜன் பெலிபீடம் மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் முதல் கால பூஜையுடன் விழா தொடங்கியது. சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பரம்பரை ஸ்தானிகர் சேது ராமலிங்க சிவாச்சியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் அடங்கிய கும்பத்தை கோவில் நிர்வாக குழுவினர் சுமந்து கோவில் கோபுர கலசத்தை அடைந்தனர். அங்கு கருடன் வானில் வட்டமிட புனித நீர் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இளையான்குடி அருகே உள்ள விரையாத கண்டன் ஊராட்சி வடுகை கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாக பூஜை, வாஸ்து சாந்தி, கோ பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்