சென்றாய சாமி கோவில் கும்பாபிஷேகம்

ஓசூர் அருகே சென்றாய சாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-11-21 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே அடவனப்பள்ளி கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்றாய சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து, சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர், புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, பிரபாகர் ரெட்டி, பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்