காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயை கட்டி அறப்போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயை கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-19 18:45 GMT

பெரம்பலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம் நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அறப்போராட்டம் நடந்தது.

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த அறப்போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயை கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது கையில் ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது தீர்வாகாது. நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வாசங்கள் எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தி நின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்