ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் ரயில் மறியல்

ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

Update: 2023-04-15 09:29 GMT

விழுப்புரம்,

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் புவனேஸ்வரிலிருந்து ராமேஸ்வரம் வந்த விரைவு ரயிலை மறித்தனர்.

மேலும் அவர்கள் ராகுல் காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேபோல நெல்லையிலும் காங்கிரஸ் கட்சியினர் நெல்லைசந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்