கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டன்;

Update:2023-03-12 13:49 IST

சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்வை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருவாலங்காடு வட்டாரத் தலைவர் ராமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டர் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது:-

மத்திய அரசு கடந்த ஓராண்டில் 8 முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.1.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வணிக சிலண்டர் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் இளங்கோவன், வட்டார பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்