காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்

காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனா்;

Update: 2023-07-07 18:45 GMT

சிவகங்கை

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்து நேற்று தீர்ப்பளித்தது. இதை கண்டித்து சிவகங்கை காங்கிரஸ் கட்சியினர் நேற்று சிவகங்கை பஸ் நிலையம் முன்பாக பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் மாவட்ட துணை தலைவர்கள் சண்முகராஜன், உடையார், வட்டார காங்கிரஸ் தலைவர் மதியழகன், மாநில மகளிர் காங்கிரஸ் துணை தலைவர் ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் இமய மடோனா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மோகன்ராஜ், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் மறியலை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்