காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-07 18:45 GMT

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தென்காசியில் பழைய பஸ்நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு தென்காசி நகர தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் கார்வின் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர். அவர்களை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்