'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
சேத்துப்பட்டில் ‘அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு-போளூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர்கள் அன்பழகன், தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜாபர்அலி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, வட்டார நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் சேத்துப்பட்டு நகர காங்கிரஸ் இளைஞர் அணி பொறுப்பாளர் ஷானவாஸ் நன்றி கூறினார்.