ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் உருவப்படத்தை ராவணனாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிட்ட பா.ஜனதா கட்சியை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவகர் அலி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜூபைர் அகமது, மாவட்ட துணைத்தலைவர் பாஷா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முகமது அர்ஷத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் கலந்துகொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் விஜயபாஸ்கர், விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் கனகராஜ், ஆரிப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.