காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து புகழூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேலாயுதம்பாளையம் தபால்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு டி.என்.பி.எல்., ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். இதில் கரூர் வடக்கு மாநகர தலைவர் ஸ்டீபன்பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.