காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போடியில், நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவர் முசாக் மந்திரி தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் சன்னாசி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கிருஷ்ணவேணி, நகர பொதுச்செயலாளர் அரசகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கியாஸ் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். பின்னர் கியாஸ் சிலிண்டருக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் வினோத்குமார், நகரச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காந்தி, முன்னாள் நகராட்சி தலைவர் சங்கரேஸ்வரன், மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் சிவகாமி சுந்தரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காங்கிரஸ் பிரமுகர் முகமது ரசூல் நன்றி கூறினார்