நெல்லையில் காங்கிரசார் கொண்டாட்டம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதையொட்டி நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2023-08-04 19:51 GMT

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதையொட்டி நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ராகுல் மேல்முறையீடு

கர்நாடக மாநிலத்தில் பிரதமர் குறித்து அவதூறு பேசியதாக குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அவரது எம்.பி. பதவியும் பறிபோன நிலையில், ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம், குஜராத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கோலாகலமாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

நெல்லையில் கொண்டாட்டம்

அதன் ஒரு பகுதியாக நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சிவாஜி மன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்