காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Update: 2023-07-27 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு பதவி விலக கோரியும் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் பசிராஜா வன்னியராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மெடிக்கல் பெரியசாமி, முருகேசன், தமிழ்ச்செல்வன், குருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்