மோடி வருகையையொட்டி காங்கிரஸ் பிரமுகர் கைது:போலீசாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்
மோடி வருகையை ஒட்டி காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டது கண்டித்தக்கது என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மணிகண்டனை பிரதமர் வருகையையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்திருப்பதை கண்டிக்கிறேன். சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கிற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதபோது போலீசார் அவரை ஏன் கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை.
இத்தகைய கைது நடவடிக்கைகள் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது. மணிகண்டனை உடனடியாக விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.