காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது மத்திய அரசு பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டி நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி, வட்டார தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநகர நிர்வாகிகள், பி.சி.சி. உறுப்பினர்கள், இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மை பிரிவு, விவசாய பிரிவு, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க பிரிவு, மனித உரிமை துறை, சிவாஜி மன்றம், எச்.எம்.எஸ்., நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
முடிவில் பி.சி.சி. உறுப்பினர் ராமசாமி நன்றி கூறினார்.