ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி

ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேட்டி

Update: 2023-06-06 21:39 GMT

ஈரோட்டில் நகர்ப்புற நலவாழ்வு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற, தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் மாநில அளவில், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்திருப்பது சிறப்பானது. ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். என்னை பொறுத்தவரை, பிரதமர் மோடியே ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறேன். மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா துணை முதல் -மந்திரி சிவகுமார் சொல்லி இருக்கிறார். இதற்கு தகுந்த பதிலை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படுவதை முழுமையாக எதிர்ப்போம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச அருகதை கிடையாது. கவர்னர் ஆர்.என்.ரவி மூன்றாம் தர பேச்சாளராக மாறிக்கொண்டு வருகிறார். அரசாங்கத்தையும், முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் எதிர்க்க வேண்டும் என நடந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்