விருது பெற்ற பஞ்சாயத்து தலைவருக்கு வாழ்த்து
பரப்பாடியில் விருது பெற்ற பஞ்சாயத்து தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.;
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ள வி.இஸ்ரவேல் பிரபாகரன் உள்ளாட்சியில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக புதுடெல்லியில் கடந்த 21-ந்தேதி ஜெம் ஆப் இந்தியா விருது பெற்றார். இதனையடுத்து அவரை நேற்று பரப்பாடியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் மற்றும் ஊர் பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் விஜி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர் யோவான் பிரபு, ஊர் பிரமுகர் சாலமோன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பஞ்சாயத்து தலைவர் இஸ்ரவேல் பிரபாகரன் பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கினார்.