இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-06-11 15:55 GMT

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை கவிதா தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகையன் முன்னிலை வகித்தார். இதில் மயிலாடுதுறை ஒன்றியத்தை சார்ந்த 103 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, மாவட்ட திட்ட அலுவலர் ஞானசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் தன்னார்வலர்களுக்கு கிராம பிரமுகர் கார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மனோகர், வீரபாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்