காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-16 15:34 GMT


சமையல் கியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெறு, பொது துறையை, தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரியும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சேவூர் கைகாட்டி ரவுண்டானா பகுதியில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணசாமி தலைமை தாங்கினார். இதில் சேவூர் கிளை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராவாளன், கிருஷ்ணாசிவசாமி, அவினாசி தெற்கு வட்டார பொறுப்பாளர் குமாரசாமி, அவினாசி நகர பொறுப்பாளர் பொன்னுகுட்டி, அவினாசி வட்டார பொருளாளர் ராயல் மணி மற்றும் காட்டுப்பாளையம் சாமிநாதன், நடராஜ், ராதாமணி, பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்