குடோனில் பதுக்கிய 580 மதுபாட்டில்கள் பறிமுதல்
நல்லம்பள்ளி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 580 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை போலி மதுபாட்டில்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 580 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை போலி மதுபாட்டில்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகசிய தகவல்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஆழிவாயன்கொட்டாய் பகுதியில் குடோன் ஒன்றில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதியமான்கோட்டை போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அருண் என்பவரது பராமரிப்பில் இருந்த குடோனில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த குடோனில் சோதனை நடத்தினர். அப்போது 580 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரூ.90 ஆயிரம் மதிப்பில் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள அருணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலி மதுபாட்டில்களா?
குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்டதா? அல்லது போலி மதுபாட்டில்களா? என்பது குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.