மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்; 3 பேர் கைது

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-08-09 01:08 IST

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள செங்கால் ஓடையில் இருந்து டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலர், ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த கேசவன் மகன் முருகன்(வயது 28), சுதாகர்(40), மணிமொழி மகன் செந்தில்(32) ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்