23 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
ஏழாயிரம்பண்ணையில் 23 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் போலீசார் ஏழாயிரம்பண்ணை எல்லம்மாள் காம்பவுண்ட் தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 50 கிலோ கொண்ட 23 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் அதுபற்றி அப்பகுதியில் விசாரித்த போது கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் ரேஷன் அரிசி மூடைகளை சேகரித்து வைத்து விட்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர். 23 ரேஷன் அரிசி மூடைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மூடைகளை கைப்பற்றிய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.