சூளகிரியில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது சரக்கு வேன் பறிமுதல்

Update: 2023-06-15 19:30 GMT

சூளகிரி:

சூளகிரி போலீசார் நேற்று முன்தினம் கோபசந்திரம் பெட்ரோல் பங்க் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 466 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், பான்மசாலா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 500 ஆகும். விசாரணையில் அதை பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தியதாக பர்கூர் தாலுகா சிகரலப்பள்ளியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 500 மதிப்புள்ள குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சரக்குவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்