புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-24 18:50 GMT

புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புகழூர் நகராட்சியை பசுமையான நாகராட்சியாக்குதல் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டு புகழூர் நகராட்சியை பசுமையான, தூய்மையான நகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும் எனவும், நகராட்சியை தூய்மையான நகராட்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தேவையற்ற வகையில் குப்பைகளை கண்ட இடங்களில் போடக்கூடாது எனவும் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்