ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க நிபந்தனை -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்களை விடுவிக்க நிபந்தனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரலிட்டது

Update: 2022-12-27 21:06 GMT


தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் இவருக்கு சொந்தமான மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வேனை விடுவிக்கும்படி உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதேபோல தங்கப்பாண்டியன், சரவணக்குமார் ஆகியோரும் தங்களது வாகனங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி தனித்தனியாக மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பறிமுதல் செய்த வாகனங்களை நீண்ட காலத்திற்கு போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைப்பதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. ஜாமீன் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை பெற்று பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, மனுதாரர்களின் வாகனங்களை சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக விடுவிக்க வேண்டும். பிரபாகரன் ரூ.5 ஆயிரம், தங்கப்பாண்டியன் ரூ.7,500, சரவணக்குமார் ரூ.3 ஆயிரமும் திரும்ப பெறாத வகையில் தர்மபுரி மாவட்ட கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகையை அடிப்படை வசதிக்காக அந்த கோர்ட்டு செலவிடலாம். மனுதாரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்