பாலியல் புகார்: பாதிரியார் பெனடிக் ஆன்றோவிற்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் புகாரில் சிக்கி சிறையில் உள்ள பாதிரியாருக்கு பெனடிக்ட் அன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update: 2023-04-25 11:38 GMT

நாகர்கோவில்,

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தது.

பேச்சிப்பாறையை சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் உள்ள பாதிரியாருக்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் வழங்கப்பட்டாலும், அவருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதிரியார் பெனடிக்ட் மறு அறிவிப்பு வரும் வரை, தினமும் இருவேளை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்