மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தூத்துக்குடி மாவட்டத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பால் விலை
பா.ஜனதா கட்சி சார்பில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி கிழக்கு மண்டலம் சார்பில் தூத்துக்குடி கீழரதவீதி தேரடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி தலைமை தாங்கினார். வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தொழில்பிரிவு மாநில செயலாளர் கொம்பன் பாஸ்கர், தொழில்பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பால பொய்சொல்லான், மீனவர் பிரிவு ஜோசப், மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர் உஷாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கு மண்டலம் சார்பில் டூவிபுரம் 5-வது தெருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சி மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். இதே போன்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முத்தையாபுரம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தெற்கு மண்டலம் பா.ஜனதா கட்சி சார்பாக முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் உமரிய சத்தியசீலன் முன்னிலை வகிததார். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவ குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் பரமசிவம், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம், பட்டியல மாநில செயற்குழு உறுப்பினர் மாசாணம், மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் புனிதா, சுமித்ரா, ராஜ்குமார் பொய் சொல்லான் மகேஷ், துர்க்கை யப்பன் செல்லப்பன், முருகன், முத்துகிருஷ்ணன், ஜெயராம் முத்து பெரியநாயகம், சிலம்பு, பாலகுரு முருகேசன், முகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரல்
ஏரல் ஒன்றிய பா.ஜனதா கட்சி சார்பாக ஏரல் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில விருந்தோம்பல் பிரிவு செயலாளர் பாலமுருகன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் வீரமணி, வணிகர் பிரிவு மாவட்ட பொருளாளர் பொன்வேல், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், அமைப்பு சாரா பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் முத்துமாலை, தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அரிபுத்திரன், நிர்வாகி கருப்பசாமி பாண்டியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரோஜா, மாவட்ட ஆன்மீக பிரிவு செயலாளர் சுகுமார் மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைவர் சரவணன் வெள்ளை பாண்டியன் ஜெயராமமூர்த்தி, சிறுத்தொண்டநல்லுர் கிளை தலைவர் பால்துரை மற்றும் நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் உத்தண்டராஜ், அரசு தொடர்புத்துறை மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா, உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் தங்கத்துரை, விவசாய அணி மாவட்ட துணை தலைவர் செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
உடன்குடி
உடன்குடி பஜாரில் ஒன்றிய, நகர பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். நகர தலைவர் பாலன், ஒன்றிய பொதுச்செயலர்கள் சின்னத்துரை, சிவக்குமார், மாநில பொதுக்குழு ஊறுப்பினர் பரமசிவன், மாவட்ட மகளிரணித் தலைவி தேன்மொழி ஆதியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
புதியம்புத்தூர்
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய பொதுசெயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் வலசைசரவணன், வடக்கு மாவட்ட விளையாட்டுப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன், மாவட்ட செயலாளர் செந்தில்பிரபு, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் அருணாசலம், வர்த்தக அணி ஒன்றிய தலைவர் வேல்ராஜ், ஓ.பி.சி அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.