மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
பொள்ளாச்சி
மின் கட்டண உயர்வை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள மின் மாற்றிக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டி பா. ஜனதா கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பார்வையாளர் மோகன் மந்தராசலம், முன்னாள் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், நகர தலைவர் பரமகுரு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல் துரை, கோவிந்தராஜ், ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.