போக்குவரத்தை சீர்செய்யும் பயிற்சி நிறைவு விழா

கல்லூரி மாணவர்களுக்கான போக்குவரத்தை சீர்செய்யும் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2023-10-12 16:57 GMT

வேலூர் மாவட்ட போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் விழிப்புணர்வு குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் சாலை பாதுகாப்பு ரோந்து என்ற தலைப்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 கல்லூரிகளை சேர்ந்த 400 மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பாக ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி நிறைவு விழா நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். குழு செயலாளர் இக்ரம், துணை தலைவர்கள் சீனிவாசன், ரமேஷ்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி பெற்ற மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் மாணவர்கள் போக்குவரத்து விதிமீறலால் ஏற்படும் விளைவுகள் குறித்து நாடகம் மூலம் நடித்து காட்டினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசுகையில் சாலை பாதுகாப்பு என்பது முக்கியம். விதிமீறல்களும் அதிகமாக நடக்கிறது. அதை தடுக்கும் பணியில் ஈடுபட உள்ள. உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பயிற்சி அளித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்