அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை போட்டிகள்

நீடாமங்கலம் வட்டார அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை போட்டிகள் நடந்தன.

Update: 2022-11-30 19:00 GMT

நீடாமங்கலம் வட்டார அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை போட்டிகள் நடந்தன.

கலை போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கலை போட்டிகளுக்கு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் கலந்து கொண்டு பேசினார்.

திருவாரூர் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், வளமைய மேற்பார்வையாளர் சத்யா, கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் அன்புராணி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

நடன நிகழ்ச்சி

தொடக்க விழாவில் காரக்கோட்டை உயர்நிலைப் பள்ளி மற்றும் ராயபுரம் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சம்பத் வரவேற்றார். தென்காரவயல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்