போலீசாருக்கு கணினி பயிற்சி

போலீசாருக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2023-10-13 18:16 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு கணினி பயிற்சி தனியார் கல்லூரியில் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், வரும் காலங்களில் போலீஸ் நிலைய பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கபட உள்ளதால் போலீசில் பணிபுரியும் அனைவரும் கணினி பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார். மேலும் அவர் ஒவ்வொரு போலீஸ்காரரும் பயிற்சியை கற்றுக்கொள்வதன் முக்கிய நோக்கம் குறித்தும் எடுத்துரைத்தார். முன்னதாக அவர் நாரணமங்கலத்தில் உள்ள துப்பாக்கி சூடுதளத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி (பெரம்பலூர் சரகம்), சோமசுந்தரம் (ஆயுதப்படை), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசுவரன் (தனிபிரிவு), முனீஸ்வரன் (ஆயுதப்படை) ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்